ஜோபைடனுக்கு கொரோனா தொற்று உறுதி..!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தற்பொழுது அதிபர் ஜோபைடனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்கள் சோதனையிட்டதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
அதிபருக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளன எனவும் கொரோனா தடுப்பூசி ஏற்கனவே அவர் போட்டுக் கொண்டதால் அவரது உடல்நிலைக்கு பிரச்சினைகள் வர வாய்ப்பு இல்லை என பிரத்யேக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





