--- --:--:-- --

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் பலி..!

5

குன்னூரில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்க்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

 

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இருசக்கர வாகனம் பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது.

 

இதில் சுரேந்திரன் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon