வழிபாட்டுத்தளத்தில் நடந்த சோகம்.. மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்ட பயங்கரம்..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் வழியங்காடு வழிபாட்டுத்தளத்தில் மின்சாரப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த பகுதியில் கோவிந்தராஜ் என்பவரின் 15 வயது மகன் மின்சார கசிவு ஏற்பட்டிருந்த வயரில் கை வைத்தது. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். உடனடியாக அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்த பொழுது அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவலர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





