--- --:--:-- --

கோலி சோடா உடன் சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்..!

2

சென்னை அருகே காரப்பாக்கத்தில் சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோகுல் என்பவர் சரக்கு வாகனத்தில் கோலி சோடா பாட்டில்களை ஏற்றுக்கொண்டு சென்றுள்ளார்.

 

காரப்பாக்கம் அருகே சென்ற பொழுது தண்ணீர் குடிப்பதற்காக வாகனத்தை ஒட்டியவாறு ஒரு கையால் தண்ணீர் பாட்டிலை எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதிக் கவிழ்ந்தது.

 

இதில் ஓட்டுனர் மற்றும் உடன் வந்தவர் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த துறைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறையினர் வந்து கிரேன் உதவியுடன் சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் சாலையில் கொட்டிய ஆயில் மற்றும் டீசல் மீது மண்னை கொட்டி வாகனங்கள் வலுக்காதவாறு செய்தனர்.

 

Right Menu Icon