தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல்..!
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 64 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. சாலைகளில் பராமரிக்கும் விதமாக வாகன ஓட்டிகளிடம் கட்டணத்தை வசூலிக்கும் பணியை சுங்கச்சாவடிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தள்ளிப்போனது. இந்த நிலையில் 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
அதன்படி வேலூர் மாவட்டம் பள்ளி குண்டா, திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புதிய கட்டண உயர்வுக்கான அறிவிப்பு பலகையை சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





