சொந்த நிலத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட பாமக ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு..!
தஞ்சை மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக விவசாய நிலத்தை தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் மணல் கொள்ளை நடத்தியுள்ளார். கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே ஊராட்சி தலைவர் மணல் கொள்ளை அடிப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் பறந்தது.
இதன் பேரில் பாமக ஊராட்சி தலைவர் கோவிந்தராஜன் வீட்டிற்கு பின்புறம் உள்ள பட்டா நிலத்தில் ஏஎஸ்பி தலைமையே ஆய்வு செய்தனர். அப்பொழுது பட்டா நிலம் மூன்று ஏக்கரில் 25 அடி ஆழத்திற்கு மணல் அள்ளியது தெரியவந்தது.
மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று ஜேசிபி இயந்திரங்கள் ஒரு லாரி மற்றும் இரண்டு டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வேறு சில விவசாய நிலத்தில் உள்ள மணலையும் தோண்டி எடுத்த நிலையில் வெளியில் தெரியாதவாறு மூடி இருப்பது தெரிய வந்தது. தலைமறைவான பாமக ஊராட்சி தலைவர் கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





