--- --:--:-- --

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை

1

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இதனால், அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் மழை பெய்யும் போது, 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருந்ததை விட வெப்பம் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் சில இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon