திருச்சியில் பெண்களை அசிங்கமாக பேசிய யூடியூபர் கைது..!
பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி youtube இல் வீடியோ பதிவிட்டு வந்த நபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விருதுநகரை சேர்ந்த விஜய் என்கிற நபர் பல பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி அதனை தனது youtube சேனலில் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவன் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் மீது சென்னை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல பெண்கள் புகார் அளித்திருந்தது தெரிய வந்தது.
அது மட்டும் இன்றி ஒரு வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதோடு உன்னால் முடிந்தால் என்னை கைது செய்து பார் என்று பேசியிருந்தார். இந்நிலையில் திருச்சியில் இருந்து துர்க்கை ராஜை கைது செய்த போலீசார் புதுச்சேரி குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





