பிரபல பிரியாணி கடையில் கலப்படம்..ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரி மீது தாக்குதல்..!
மயிலாடுதுறையில் ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரி உட்பட 2 பேர் மீது பிரியாணி கடை உரிமையாளர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடையில் கலப்படம் நடைபெறுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அங்கு கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது கடை உரிமையாளர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் சுகாதார ஆய்வாளர்களுடன் தான் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஒருவராஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தாக்குதலின் ஈடுபட்ட இளைஞர்கள் சமாதான பேச்சு வார்த்தை நடத்த நகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
அப்பொழுது அவர் தன் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பணிகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





