--- --:--:-- --

திருவாடானை அருகே தூய செபஸ்தியார் ஆலய சப்பர பவனி..!

2

திருவாடானை அருகே தூய செபஸ்தியார் ஆலய சப்பர பவனி 11 வருடத்திற்கு பிறகு நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய உள்ளது. இந்த ஆலய திருவிழா மே 28ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

 

ஒவ்வோர் நாளும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, நவநாள் நிகழ்வு நடந்தது. திரு பலியினை பங்குதந்தைகள்  நடத்தினர். இந்த ஆலய சப்பர பவனி கடந்த 11 வருமாக சப்பரம் சென்று வர சரியான சாலை வசதி மற்றும் பலவேறு காரணங்களால . தற்போது அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு சப்பர பவனி நடந்தது.

திருவிழாவில் சிறப்பு திருப்பலியைத் பங்குதந்தை நடத்தியதை தொடர்ந்து  தூய செபஸ்தியார்  சொரூபத்தை சப்பரத்தில் வைத்து அதனை இறைமக்கள் சுமந்து பவனி வந்தனர்.

இந்த பவனியின் போது  வான வேடிக்கை நடைபெற்றது.  இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறைமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

Right Menu Icon