--- --:--:-- --

ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் குறையும்..!

1

சென்னையில் வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் படிப்படியாக குறையும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இதனிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வழக்கமாக, ஜூன் முதல் தேதியில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். ஆனால், இந்தாண்டு முன்பாகவே பருவமழை தொடங்கும் என வானிலை மையம் கணித்திருந்தது. அதற்கு ஏற்றார் போல, கேரளாவில் கடந்த 2 வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

 

கனமழை மற்றும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.திருவனந்தபுரம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு “மிகக் கனமழைக்கான ’ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவை போன்று, வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

 

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 2-ஆம் தேதி முதல் வெப்பம் குறையும் என்றும் வட தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon