திமுக ஆட்சியில் சட்டத்தை சமூக விரோதிகள் கையில் கொடுத்து விட்டார்கள்..!
திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 36 ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டத்தை காக்கக்கூடிய காவலர்களின் கையை விட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளை ஓங்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.
தற்பொழுது ஆட்சியாளர்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற துணிச்சலோடு சமூக விரோத சக்திகள் ஆட்டம் போடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறைக்கும் முழு சுதந்திரம் வழங்கி இரும்பு கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





