--- --:--:-- --

அப்பாவுக்கு புற்றுநோய், பண கஷ்டம், பாதியிலேயே நிறுத்திய படிப்பு – ஆல்யா மானசா

13

சின்னத்திரையில் நுழைந்து ஹிட் சீரியல்கள் நடித்து சாதித்த நடிகைகள் பலர் உள்ளார்கள். அந்த லிஸ்டில் டாப்பில் இருப்பவர்களில் ஒருவர் தான் ஆல்யா மானசா.

 

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடரில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவருக்கு அந்த தொடரே வாழ்க்கையை தொடங்கவும் உதவியாக இருந்துள்ளது.

 

சஞ்சீவை காதலித்து திருமணம் செய்தவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தற்போது சன் தொலைக்காட்சியில் இனியா தொடரில் நடித்து வருகிறார், தொடருக்கு நல்ல டிஆர்பியும் உள்ளது. இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.

 

காலையில் எழுவேன், மேக்கப் போட்டு முடி சரிசெய்து ஆடிஷனுக்கு செல்வேன். சிலநேரம் அவர்கள் கூறும் விஷயம் எனக்கு செட் ஆகாது, பல நேரம் அவர்களே என்னை அனுப்பிவிடுவார்கள்.

 

அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடி இருந்ததால் ஜிம் ட்ரெய்னராக வேலை பார்ப்பது, குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது, பாடலில் பின்னணியில் நடனம் ஆடுவது என பல வேலைகளை செய்தேன்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon