திருமணமான 1 வருடத்திலேயே உயிரிழந்த கணவர், 2வது திருமண நாளில் சீரியல் நடிகை ஸ்ருதி செய்த செயல்..!
சின்னத்திரை, வெள்ளித்திரை எதுவாக இருந்தாலும் உள்ளே நுழைந்த அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைவது கிடையாது. சிலருக்கு உடனே வாய்ப்பு கிடைத்தாலும் பலர் நிறைய போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு பெரிய இடத்தை அடைகிறார்கள்.
அப்படி சன் டிவியின் நாதஸ்வரம் தொடரில் ராகினி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இந்த தொடருக்கு பிறகு பாரதி கண்ணம்மா, வாணி ராணி போன்ற பல சீரியலில் நடித்தார், ஆனால் பெரிய ரீச் இல்லை.
ஸ்ருதி சண்முகப்பிரியா, அரவிந்த் என்பவரை திருமணம் செய்த நிலையில் கல்யாணம் ஆன ஒரே ஆண்டிலேயே அவரது கணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த ஸ்ருதி இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது இரண்டாவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




