--- --:--:-- --

நெல்லையில் ஐபிஎல் போட்டியையும், கிரிக்கட்டையும் பிரபலப்படுத்த ரசிகர் பூங்கா..!

8

நெல்லையில் ஐபிஎல் போட்டியையும் கிரிக்கட்டையும் பிரபலப்படுத்த ரசிகர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இன்று மற்றும் நாளை நடக்கும் போட்டிகளை காண நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் ரசிகர் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

 

ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை பிரபலபடுத்த இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon