--- --:--:-- --

காணாமல் போன சிறுவன்..காவல் நிலையத்தில் ஒப்படைப்பு..!

7

அரியலூரில் வழி தவறி சுற்றி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டான். திருவனந்தான் வழியாக ஜெயங்கொண்டம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் 9 வயது சிறுவன் ஏறியுள்ளான்.

 

எங்கே செல்ல வேண்டும் என பேருந்து நடத்துனர் கேட்க சிறுவன் செய்வதெரியாமல் திகைத்து நின்றுள்ளான். இதனால் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் சிறுவனுக்கு உணவு வாங்கி கொடுத்து பெற்றோர் குறித்து விசாரணை நடத்தினர்.

 

அப்பொழுது சிறுவன் திருச்சியை சேர்ந்த சூர்யா என்பதும் அவரது பெற்றோர்களுக்கு கண் தெரியாது என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல் நிலையத்திற்கு வந்து சிறுவனின் உறவினர்கள் சூர்யாவை அழைத்துச் சென்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon