தாயின் மூன்றாவது கணவரை கொன்ற மகன்..!
தாயின் மூன்றாவது கணவரை மகன் நடு ரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பானை கரையைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரின் தாய்க்கு மூன்று கணவர்கள் இருந்த நிலையில் மூன்றாவது கணவரை சரித்திர பதிவேடு குற்றவாளி உடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த பரணி குமாருடன், தன் நண்பருடன் சேர்ந்து சென்று மாதேஷ் தகராறு செய்த நிலையில் இருவருக்கும் இடையேயான மோதல் முற்றி இருக்கிறது.
இதில் நடுரோட்டில் வைத்து பரணிக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மாதேஷ் மற்றும் அவரது நண்பர் முஹம்மது தவ்சிக்கை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





