கணவனை கட்டிப் போட்டு கதற விட்ட மனைவி..!
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனன் ஸைதி. இவர் அதே பகுதியை சேர்ந்த மெஹர் ஜஹான் என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் மெஹர் ஜஹான் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவன் மீது மனைவி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இரவு தூங்கும் போது போதை கலந்த பாலை கொடுத்து கணவருக்கு மயக்கம் அடைய செய்து கை கால்களை கட்டிப்போட்டு மனைவி அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து மனைவி சிக்க வைக்க அவருக்கு தெரியாமல் அறையில் கேமரா ஒன்றை வாங்கி பொருத்திருந்தார். அதில், தாலி கட்டிய கணவர் என்று கூட பாராமல் கை கால்களை கட்டிப்போட்டு சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் கணவர் மனன் ஸைதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் சித்திரவதை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துது கைது செய்தனர். கள்ளத்தொடர்வை கண்டித்த கணவனை ஆத்திரத்தில் மனைவி மெஹர் ஜஹான் இக்கொடுமையை செய்துள்ள அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.





