திருமணம் முடிந்த ஒரு ஆண்டில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு..!
வாணியம்பாடி அருகே திருமணமாகி ஓராண்ட பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பின் சந்தேகம் இருப்பதாக கூறி பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கொட்டாவூர் பகுதியில் சேர்ந்த காவலர் புவனேஸ்வரிக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. புவனேஸ்வரி திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையறிந்த புவனேஸ்வரியின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் சுதாகர் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆலங்காயம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பேரில் சந்தேக மரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் சுதாகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





