--- --:--:-- --

பொருளாதாரத்தை மீட்டெடுக்க செய்ய வேண்டிய மன்மோகன் சிங்கின் 9 அறிவுரைகள்

1-1521173502

நாட்டின் பொருளாதார மந்த நிலையை ஒப்புக்கொண்டு இந்த 5 சீர்திருத்த நடவடிக்கைகளை உடனே மத்திய அரசு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து ஊடகமொன்றிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி அளித்தார்.

 

துறைசார் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக முழு பொருளாதார கட்டமைப்பை ஒரே நேரத்தில் முன்னெடுத்து செல்வதற்கான முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்படவேண்டும் என அறிவுறுத்தி அவர் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக கூறினார். குறுகிய காலம் வருவாய் இழப்பை சந்தித்தாலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு தர்க்க ரீதியாக மாற்றியமைக்க வேண்டும்.

 

அதாவது சில பொருட்கள் மீதான வரியை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவதாக விவசாயத்தை புதுப்பிப்பது உடன் கிராமப்புற நுகர்வு அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல் விவசாய சந்தைகளை விடுவதன் மூலம் பணம் மக்கள் கைகளில் புரளும்.

 

இதனால் கிராமப்புற மக்களிடம் நுகர்வு அதிகரிக்கும் மூன்றாவதாக மூலதன உருவாக்கத்திற்கான அமைப்பில் பணப்புழக்கத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நான்காவதாக ஜவுளி ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு வசதி போன்ற முக்கிய துறைகளுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் துறைகளை சார்ந்த சிறு குறு தொழிலாளர்கள் கடன் பெறும் முறைகளை எளிமையாக இதை செய்ய முடியும்.

 

ஐந்தாவது நடவடிக்கையாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் வர்த்தகப் போரின் காரணமாக வளர்ந்து வரும் ஏற்றுமதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஐந்து தீர்வு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படும் பட்சத்தில் தற்போது ஐந்து சதவீதத்தில் உள்ள மொத்த உள்நாட்டு வளர்ச்சி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என தெரிவித்துள்ளார்.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதை மத்திய அரசு மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon