400 மீட்டர் தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர்!

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவிலிருந்து இரண்டு புள்ளி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நிலவிலிருந்து 400 மீட்டர் தொலைவில் இருக்கும் போதுதான் சிக்னல் துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

நிலவின் மேற்பரப்பிற்கு சென்று விக்ரம் லண்டனில் இருந்து 400 மீட்டர் வரை சிக்னல் கிடைத்தது என தெரியவந்துள்ளது. நிலவை நெருங்கும் விக்ரம் லேண்டர் குறித்த கிராஃப்ட் புகைப்படத்தின் மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. அதாவது திட்டமிடப்பட்ட பாதையில் நிலவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இருக்கும் போதுதான் தொடர்பு துண்டிக்கப்பட்டு பாதை மாறியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 

விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயலும் நிலையில் அவர்களோடு நாள்தான் ஆய்வாளர்களும் களமிறங்கியுள்ளனர்.


Leave a Reply