--- --:--:-- --

அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தை..!

1

அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் இருந்து தவறி விழுந்த கைக்குழந்தை நல்வாய்ப்பாக நூழிலையில் உயிர் தப்பியது. சென்னையில் உள்ள போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

 

இதனிடையே, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் ஒரு வயது குழந்தை ஒன்று தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்த அந்த குழந்தை, மேற்கூரை ஒன்றில் தொங்கிய படி கிடந்தது.

 

இதைக் கண்டு எதிரே உள்ள குடியிருப்பில் இருந்தவர்கள் பார்த்து கூச்சல் போட்டனர். பின்னர், சத்தம் கேட்டு அங்கு கூடிய இளைஞர்கள் குழந்தையை பாகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.

 

கரணம் தப்பினால் மரணம் என்பதை அறியாமல் அந்தக் குழந்தை, தனக்கே உரித்தான சுட்டித்தனத்துடன் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் குழந்தை மேற்கூரையில் லேசாக சறுக்கியது. அதைக் கண்ட பெண்கள் அச்சத்தில் கூச்சல் இட்டனர். அதுவரை சாந்தமாக இருந்த குழந்தை அழத்தொடங்கியது. அதேவேளையில், ஜன்னல் வழியாக ஏறி குழந்தையை மீட்கும் பணியில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டனர்.

 

மேலும், குழந்தை தவறி விழுந்தால் அதை பாதுகாப்பாக மீட்கும் வகையில் கீழே போர்வையை பிடித்தவாறு இளைஞர்கள் சிலர் தயாராக இருந்தனர். ஆனால், ஜன்னல் வழியாக மேலே ஏறிய இளைஞர், குழந்தையை ஒற்றைக் கையில் லாவகமாக பிடித்து தூக்கி காப்பாற்றினர். இதனால், அந்த குழந்தை நல்வாய்ப்பாக நூழிலையில் உயிர் தப்பியது. அதன் பின்னர் தான் அங்கிருந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நெஞ்சை பதற வைத்த இந்த திக் திக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon