ஸ்டாப்பில் பஸ் நிறுத்தவில்லையா? அரசு அதிரடி அறிவிப்பு..!
அரசு மாநகர பேருந்தை நிறுத்தாமல் சென்றால் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் பல சமயங்களில் நிற்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இந்த நிலையில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்து நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணம் எல்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், நேரம் மற்றும் நிற்காமல் சென்ற நேரம், பேருந்து நிறுத்தத்தின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





