--- --:--:-- --

தூய்மை பணியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி..!

9

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் சாக்கடை கழிவு நீரை தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் சுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இங்கு தினமும் ஏராளமானோர் சாப்பிட்டு வரும் நிலையில் கழிவுகள் அழித்து சிறிய தொட்டி மூலம் வெளியே செல்கிறது.

 

தூய்மை பணியாளர்கள் கையுறை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுகளை வெறும் கைகளால் சுத்தம் செய்தனர். இதனிடையே தூய்மை பணியாளர்கள் கையுறை இன்றி கழிவுகள் அள்ளுவது எனக்கு தெரியாது என்று கூறிய நகராட்சி ஆணையர் இது குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon