நெல்லையில் பயங்கரம்.. பெண்ணை கட்டிப்போட்டு வீடு புகுந்த மர்ம நபர்கள்..!
நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற முகமூடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை பாளையம் கோட்டை பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மனைவி இராமலக்ஷ்மி சண்முகசுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் ராமலட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கோடை விடுமுறை என்பதால் ராம் லக்ஷ்மி தனது இரண்டு குழந்தைகளையும் தனது தாய் வீட்டிற்கு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ராம் லக்ஷ்மி தூங்கிக் கொண்டிருந்த பொழுது முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வீட்டின் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
ராமலக்ஷ்மி சத்தம் கேட்டதால் அவரை மர்ம நபர்கள் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த அனைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்து சென்றனர். தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டிலிருந்து தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





