மன்சூர் அலிகானுக்கு உடல் நலக்குறைவு.. மேல் சிகிச்சைக்கு சென்னை வருகிறார்..!
வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
கடந்த சில தினங்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு குடியாத்தம் பகுதிக்கு வந்துள்ளார்.
அப்பொழுது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார்.





