--- --:--:-- --

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும் – கமிஷனர் எச்சரிக்கை

1

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

 

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அரசிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்களில் விடுமுறை வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்.

 

இருப்பினும் வீட்டு வேலை, கூலி வேலை செல்பவர்களுக்கு வாக்களிக்கு விடுப்ப வழங்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம். அதுதவிர அரசிடம் பதிவு செய்யாத நிறுவனங்களிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

 

மேலும், அரசு உத்தரவை மீறி நிறுவனங்களை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவோம் எனவும் எச்சரித்துள்ளோம். எனவே தேர்தல் நாளன்று ஜனநாயகக் கடைமையான வாக்கை செலுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon