--- --:--:-- --

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகள், பீடி இலைகள் பறிமுதல்..!

1

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

தூத்துக்குடியில் இருந்து காயல்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்க இலாக்கா அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தது.

 

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மினிவேன் ஒன்றில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

 

அப்பொழுது அதில் 22 மூட்டைகளில் இருந்த 19,720 பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டுகளும், 17 மூட்டைகளில் இருந்து 450 கிலோ பீடி இலைகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு 32 லட்சம். பயன்படுத்தப்பட்ட மினி வேன் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதன் தொடர்புடைய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon