மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆபத்து ..நிர்மலா சீதாராமன் கணவர் எச்சரிக்கை..!
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் மணிப்பூர் போன்று நிலைமை தான் நாடு முழுவதும் ஏற்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பிரகலா பிரபாகர் எச்சரித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் வரும் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இனி நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும் என எச்சரித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் செங்கோட்டையில் இருந்தவாறு பேச்சுக்களை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாகவே பேச தொடங்குவார் என கூறிய பிரகலா பிரபாகர் லடாக், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள சூழல் நாடு முழுவதும் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறைகளை போல் நாடு முழுவதும் வன்முறைகள் ஏற்படும் என்றும் பாஜக ஆட்சியில் அசாதாரண சூழல் நாட்டில் சாதாரண விஷயமாகவே மாறிவிடும் என்றும் பிரகலா பிரபாகர் தெரிவித்திருக்கிறார்.
நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபல பிரபாகர் தொடர்ந்து மத்திய பாஜக அரசை விமர்சித்து வரும் நிலையில் தேர்தல் நேரத்தில் அவரின் கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





