--- --:--:-- --

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 12ஆம் தேதி தொடங்கும் பள்ளி கல்வித்துறை..!

4

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு விடை தாள் திருத்தும் பணிகள் வருகின்ற 12ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில் சுமார் 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

 

88 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 12-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon