--- --:--:-- --

உரக்கிடங்கில் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்த ஊழியர்..!

11

வடி மாநகராட்சியில் உள்ள உரக்கிடங்கில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுகளை அகற்றிய துப்புரவு ஊழியர் விஷ வாயு தாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் பவுல் என்பவர் திருமுல்லைவாயில் எஸ்.எம் நகரில் உள்ள பகுதியில் உள்ள காய்கறி பழங்கள் சேமித்து வைக்கும் உர கிடங்கில் பணியாற்றி வந்துள்ளார். அவருடன் சக பயணியாளர்கள் இருவரும் சென்ற நிலையில் பவுல் எவ்வித பாதுகாப்பு வாகனங்களும் இல்லாமல் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றியுள்ளார்.

 

இந்த நிலையில் நீண்ட நாட்களாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் இருந்ததால் அதிலிருந்து வெளியேறிய வாயு தாக்கி தொட்டியில் சுயநினைவின்றி விழுந்துள்ளார். இதனையடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Right Menu Icon