தேனி சின்னமனூரில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..!
தேனி மாவட்டம் சின்னமனூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதம் தூறும் முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்காததால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக தெரிவித்தனர்.
மேலும் அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு செல்வதாக அவர்கள் கூறியுள்ளனர். தற்காலிக தூய்மையை பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.





