--- --:--:-- --

விருதுநகரில் மோசமான நிலையில் பேருந்து நிலையம்..!

4.1

விருதுநகரில் 32 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் பேருந்து நிலையத்தை மக்களவைத் தேர்தலை ஒட்டியாவது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

அங்கு 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. நகரின் வெளிப்புறத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தால் இரவு நேரத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி மூடப்பட்ட பேருந்து நிலையம் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

 

இதனால் மிகவும் சேதம் அடைந்த நிலையில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக அந்த பகுதி மாறியுள்ளது. புதிய பேருந்து நிலையம் செயல்படாத காரணத்தால் விரைவு பேருந்துகள் விருதுநகருக்குள் செல்லாமல் பேருந்து பணிமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

 

இதனால் ஊருக்குள் செல்ல ஆட்டோவிற்கு 100 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon