--- --:--:-- --

மலையேற்றம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர்..!

5

வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பல்வேறு வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். நூறு சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதா ஒத்தக்கடை பகுதியில் உள்ள 400 மீட்டர் உயரம் உள்ள யானைமலை மேல்மலையற்றம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 

300-க்கும் மேற்பட்டோர் மலையேற்றம் செய்து 100 அடி நீளம் உள்ள விழிப்புணர்வு பதாகைகளை எழுதியவாறு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

இதேபோல் திருப்பத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் தர்மகராஜ் கொடியை செய்து தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுடன் சேர்ந்து போட்டியில் பங்கேற்றார். இதில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon