--- --:--:-- --

பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் திருத்தம்.. ஆசிரியர்களுக்கான கட்டுப்பாடு..!

3

பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை மறுநாள் முடிய உள்ள நிலையில் விடை திருத்தம் தொடர்பாக தேர்வுத்துறை இணை இயக்குனர் நரேஷ் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

அதில் மாவட்ட விடைத்தாள்களை அந்தந்த மாவட்டத்திலேயே மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும் ஆங்கில வழி ஆசிரியர்கள் ஆங்கில விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

மதிப்பீட்டு பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் காலதாமதம் இன்றி முடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon