கடலில் மின்னிய தங்கம்..ஐந்து கிலோ கடத்தல் தங்கம் மீட்பு..!
ராமநாதபுரம் மாவட்ட மண்டபம் அருகே கடலில் வீசப்பட்ட ஐந்து கிலோ கடத்தல் தங்கம் மீட்கப்பட்டது. இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக நாட்டுப்படகில் தங்கம் கடத்தி வரப்பட்டது.
கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தங்கம் கடத்தி வந்த கும்பல் அதிகாரிகளை கண்டதும் தங்கத்தை கடலில் வீசியது.
தங்க கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த அதிகாரிகள் கடலில் வீசப்பட்ட தங்க தேதியுடன் பணியில் ஈடுபட்டனர். 2 நாட்களாக தேடுதல் பணி நடைபெற்ற நிலையில் கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட ஐந்து கிலோ தங்கத்தின் மதிப்பு மூன்று கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது





