--- --:--:-- --

சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு

3

டந்த ஆண்டுகளைப் போலவே மதுரை சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

மதுரை சித்திரை திருவிழாவின் போது போதிய காவல்துறை பாதுகாப்பு மற்றும் மொபைல் மருத்துவ சேவைகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அன்னதானமாக வழங்கப்படும் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்ய பறக்கும் படை அமைப்பதுடன் போதுமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்படுவதையும் உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

 

இந்த வழக்கை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்றும் அதில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon