திமுக வேட்பாளர்களுக்கு குறி..மோடியின் சீக்ரெட் ஆபரேஷன்!
தமிழக தேர்தல் நிலவரங்களை பிரதமர் மோடி உடனுக்குடன் கேட்டு வருகிறார். பாஜக-வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதில் தொடங்கி, பாஜகவுக்கு சறுக்கும் இடங்கள் எவை என்றெல்லாம் பிரதமர் தினமும் உளவுத்துறை மூலம் தகவல்களை கேட்டறிகிறாராம்.
அதே நேரம், என்னதான் பிரசாரம் செய்தாலும் திமுக- அதிமுக இரண்மே பணத்தை கொடுத்து வாக்காளர்களை வசியப்படுத்துவதால் பணப்பட்டுவாடாவை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருக்கிறாராம்.
எனவே, திமுக- அதிமுக வேட்பாளர்கள் அவர்களின் பினாமிகளை குறிவைத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்த வேண்டும்; பணபலம் உள்ள இரு கழகங்களின் முக்கியஸ்தர்களின் இடங்களில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலம் நெருக்கடி தர மோடி பச்சைக் கொடி காட்டிவிட்டதாக சொல்கிறார்கள்.
அதன்படி, அடுத்த சில நாட்களில் சில முக்கியஸ்தர்களின் இடங்களில் அதிரடிச் சோதனைகள் நடக்கும் என்கிறார்கள். அதேபோல், வி.ஐ.பி.க்களின் காரை சோதனையிடாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டு உள்ளனராம். நீலகிரியில் ஆ.ராசா வாகனத்தை சரிவர சோதனையிடாத தேர்தல் பறக்கும்படையினர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டதும், இந்த பின்னணியில் தானாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




