பிரபல நடிகர் திடீர் மரணம்..அதிர்ச்சியில் திரையுலகினர்..!

மிழ் சினிமாவில் பிரபலங்களின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அடுத்தடுத்து பிரபலங்களின் மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது.

 

பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமான நடிகர் விஸ்வேஷ்வர ராவ், திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்ர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், குழந்தை நட்சத்திரமாக 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

 

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் இவர். சுமார் 350 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவருக்கு தற்போது வயது 62.இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.