தலை குப்புற நிற்க வைத்து அடித்தே கொலை..கொடூர தண்டனை கொடுத்த காதலி..!
சேலத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் தனிக்குடித்தனம் நடத்திய ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த பழனி என்பவர் ஒரு வீட்டில் வாடகைக்கு கணவன் மனைவி குடியிருந்த நிலையில் மூன்று நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. தகவலின் பேரில் வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற பொழுது அந்த வீட்டில் வசித்து வந்த நபர் உயிரிழந்து கிடந்தார்.
அழுகிய நிலையில் கடந்த உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் இறந்து கிடந்த நபர் சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த நிஷா பாஷா என்பதும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியாமல் பிரியா என்ற பெண்ணுடன் அந்த வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. பிரியா வீட்டை விட்டு தப்பிச் சென்றது உறுதியானதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.





