--- --:--:-- --

ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி செய்த பெண் போலீஸ்..!

8

மகாராஷ்டிராவில் ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த 3 ரயில்வே போலீசருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநில மும்பையில் விரைவு ரயிலில் பெண் பயணித்துள்ளார்.

 

இந்நிலையில் ரயில் வந்த பொழுது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த 3 பெண் போலீசார் உடனடியாக கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

இதையடுத்து அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 3 பெண் காவலர்களுக்கு அவரது கணவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon