வட கடலோர மாவட்டங்களில் இன்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
வட கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 24 மணி நேரத்திற்கு வானமே மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





