டெங்கு காய்ச்சல் ஆய்வுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை..!
டெங்கு காய்ச்சலை கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் சரயு மாவட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டிகள் மழை நீர் தேங்காத வகையில் பொருட்களை சுத்தமாக வைத்துக்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தினசரி காய்ச்சல் குறித்த விபரங்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியவர் மலேரியா, சிக்கன் குனியா போன்ற காய்ச்சலை பரிசோதிக்க ராபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தக்கூடாது என கூறினார்.
கடந்த 15 நாட்களில் 11 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





