--- --:--:-- --

ரயில் மேடையில் தவறி விழுந்த பெண்.. தக்க சமயத்தில் வந்து மீட்ட காவலர்..!

2

கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி துரிதமாக மீட்கப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவையிலிருந்து சென்னை நோக்கி சென்ற சூப்பர் பாஸ்டர் ரயில் நடைமேடையிலிருந்து புறப்பட்டது.

 

அப்பொழுது இரு பெண் பயணிகள் அவசரமாக ரயிலில் ஏற முயன்றனர். அதில் ஒரு பெண் ரயிலில் ஏற முடியாமல் தவறி கீழே விழுந்தார். இதை கண்ட ரயில் பாதுகாப்பு பணி தலைமை காவலர் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை நடைமேடைக்கு இழுத்து விபத்தில் இருந்து காப்பாற்றினார். இதையடுத்து ஓடும் ரயிலில் பயணிகள் ஏற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon