விடுதி அறைக்குள்ளே வார்டன் எடுத்த விபரீத முடிவு..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் கல்லூரியில் விடுதிக்காப்பாளர் விடுதியின் உள்ளே தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியில் மாணவர்கள் விடுதி பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தினுள் அமைந்துள்ளது.
அங்கு கோவை வால்பாறையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் விடுதி காப்பாளராக பணியாற்றி வந்தார். 25 வயதான இவ்வாறு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





