--- --:--:-- --

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் முன்னே குழந்தை உயிரிழப்பு..!

7

விழுப்புரம் மாவட்டத்தில் தாயின் கண் முன்பே பள்ளி சக்கரத்தில் சிக்கி மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் பவானி தம்பதியினரின் ஏழு வயது மகள் அந்த பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

பள்ளி வேனில் வீடு திரும்பிய மகளை அழைத்து செல்வதற்காக பவானி தனது மூன்று வயது மகன் கோகுல் ராஜுடன் சென்றுள்ளார். அப்பொழுது சிறுவன் வேனின் பின்பக்க டயர் அருகே நின்றதை தாயார் பவானியும் ஓட்டுனரும் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

ஓட்டுனர் வேனை இயக்கவும் அடியில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையில் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

Right Menu Icon