ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள்..!
தெலுங்கானாவின் ஜகத்தியாளா மாவட்டத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அலுவலக கட்டிடம் மிகவும் பாழடைந்து உள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்ற ஊழியர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே கட்டடத்தின் மேற்கூரை ஏற்கனவே இடிந்து விழுந்துள்ளதால் தற்காப்பு நடவடிக்கையாக தலையில் ஹெல்மெட் அணிந்து பணியாற்றுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.





