சோதனை நடத்த வந்தாலே சிலருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது : ஆளுநர் தமிழிசை
சோதனை என்று வந்தாலே சிலருக்கு நெஞ்சுவலி வந்து விடுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
கம்பன் படகம் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் 40 ஆவது ஆண்டு கம்பன் விழாவை அவர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பிற மொழிகளால் தமிழ் மொழியை அழிக்க முடியாது என்றும் தமிழால் தான் பிற மொழிகள் வாழும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.
சோதனை நடத்த வந்தாலே சிலருக்கு நெஞ்சுவலி வந்து விடுவதாக மறைமுகமாக விமர்சித்து இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் நாட்டை ஆள வேண்டும் என்றாலும் காட்டை ஆள வேண்டும் என்றாலும் ராமர் ஒரே நிலையில் இருந்து தான் என தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





