அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.. சுகாதாரமற்ற நிலையில் இருந்த கழிவறை..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை கண்டு அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சிகிச்சைகள் குறித்தும், நோயாளிகளின் உடல்நிலை குறித்தும் உறவினர்களிடம் கேட்டறிந்தார். அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார்.
அப்பொழுது கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை கண்ட அதிகாரிகளை விலைக்கு வாங்கினார். போதிய வெளிச்சம் இல்லாமலும் சில கழிவறைகளில் கதவுகள் இல்லாமல் இருந்ததை கண்டு அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் துப்புரவு பணியாளர்களின் மேலாளர் சிலம்பரசனை அழைத்து இந்த வேலைக்கு நீங்கள் தகுதி இல்லை எனவும் பணியில் இருந்து உடனே வெளியேறுங்கள் எனவும் கடுமையாக சாடினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





