சாலை விபத்தில் மகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சோகம்..!
சென்னையை அடுத்த பூவிருந்தவள்ளி அருகே ஊராட்சி மன்ற குப்பை லாரி ஏற்படுத்திய விபத்தில் மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
ஆவடியை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி வரலட்சுமி மகளும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது காட்டுப்பாக்கம் அருகே இவர்களின் வாகனத்தின் மீது காட்டுப்பாக்கம் ஊராட்சி குப்பை லாரி மோதி உள்ளது.
இதில் இருவரும் கீழே விழுந்த பொழுது குப்பை லாரி வரலட்சுமி மீது ஏறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து பற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய குப்பை லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





